வாகனங்கள் தொடர்பான விபரங்கள் இனி இணையத்தளத்தில்

இலங்கையில் பதிவு செய்யப்படுகின்ற அனைத்து வாகனங்களின் விபரங்களையும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

moto-trafic

வாகனங்கள் தொடர்பில் ஏற்படுகின்ற முறைகேடுகள் மற்றும் துஸ்பிரயோக சம்பங்களை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த இணையத்தளத்தின் மூலம் வாகனங்களின் பெயர்கள் மற்றும் அவை தொடர்பான அனைத்து விபரங்களும் பிரசுரிக்கப்படவுள்ளன.

இந்த இணையத்தளத்துக்குள் பிரவேசிக்க கட்டணமாக 150 ரூபாவை கடன் அட்டைகளின் மூலம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல் இந்த இணையத்தளத்துக்குள் பிரவேசிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts