வாகனங்களை கணக்கெடுத்து அறிவித்த பசில்

angajan-pasil (9)பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வீதியில் பயணித்த வாகனங்களை கணக்கெடுத்து பிரசார மேடையில் வைத்து அறிவித்த சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. ஏ-9 வீதியால் ஒரு மணித்தியாலயத்திற்குள் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கிலெடுத்தே அவர் அறிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் சாவகச்சேரியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில்,

“இந்த மேடையில் இருந்தவாறு ஏ-9 வீதியில் பயணித்த வாகனங்களை இதுவரை நேரமும் நான் கணக்கிலெடுத்தேன்.இந்த கூட்டத்திற்கு நான் இரவு 6.15 க்கு சமூகம் தந்தேன். 7.15 வரையிலான ஒரு மணி நேரத்திற்குள் இந்த வீதியில் எத்தனை வாகனங்கள் பயணித்தன என கணக்கிலெடுத்தேன்.

குறித்த ஒரு மணி நேரத்திற்குள் ஏ-9 வீதியில் 280 வாகனங்கள் பயணித்துள்ளன. இதில், பஸ்,லொறி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சகல வாகனங்களும் அடங்குகின்றன. இதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்த ஒரு மணி நேரத்திற்குள் இராணுவத்தின் ஒரு வாகனம் கூட பயணிக்கவில்லை என்பதை நான் அவதானித்தேன்” என்றார்.

Related Posts