வல்வெட்டித்துறையில் வயோதிபப் பெண் படுகொலை!- உறவினர் உட்பட இருவர் கைது- தங்க நகைகளும் மீட்பு

arrest_1வல்வெட்டித்துறையில் வயோதிபப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இந்தப் படுகொலை நடைபெற்றது. இதன்போது குறித்த வயோதிபப் பெண் அணிந்திருந்த பணம் மற்றும் நகை என்பன திருடப்பட்டன.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் ஒருவர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர் என்றும் அவரிடம் இருந்து தங்க நகைகள் சில மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் குறித்த இருவரையும் பொலிஸார் தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்படைய செய்தி

பட்டப்பகலில் பெண் குத்திக் கொலை! நகை பணம் என்பன கொள்ளை

Related Posts