வல்வெட்டித்துறையில் தொழிலுக்கு சென்ற மீனவர் கடலில் மாயம்

missing personவல்வெட்டித்துறை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி காணாமற்போயுள்ளார்.

இக்கடற்பரப்பில் படகில் தொழில் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் இடி மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக குறித்த மீனவர் கடலில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவருடன் கூடச்சென்ற மற்றுமொரு தொழிலாளி இச்சம்பவத்தின்போது மயக்கமடைந்தார். இவர் நேற்றுக்காலை கரை திரும்பிவிட்டார். ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தங்கவேலாயுதம் அருளானந்தம் (வயது – 18) என்பவரே கடலில் மூழ்கி காணாமற்போயுள்ளார்.

Related Posts