வல்லிபுர கோயிலுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புனரமைக்க 1.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

road_worksவல்லிபுர கோயிலுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த வீதிப் புனரமைப்புக்கு 1.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஒதுக்கீட்டின் கீழ் ஆலயத்திற்குச் செல்லும் மூன்று வீதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு விஜயம் செய்த துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கல் அபிவிருத்தி திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல இந்த வீதி புனரமைப்பு பணிகளை விரைவாக முடிக்குமாறும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளரிற்கு உத்தரவிட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் ஆலயத்தின் உள் வீதிப் புனரமைப்புக்குரிய மதிப்பீடுகளையும் செய்யுமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related Posts