வலி.வடக்கு மீள்குடியமர்வு இராணுவத்தினர் கைகளிலேயே! என்னால் எதுவும் செய்ய முடியாது: இமெல்டா கைவிரிப்பு

வலிகாமம் வடக்கு பகுதி மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக என்னால் எதுவும் கூற முடியாது எனவும் மக்கள் இப்பகுதியில் குடியமர பாதுகாப்பு தரப்பினரே தனக்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.வலிகாமம் வடக்கு, ஊரணி, மயிலிட்டி வடக்கு, பலாலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.அரச அதிபருக்கு தம்மை விடுவிக்குமாறு கோரி மகஜர் ஒன்றை கையளிளத்திருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பில் யாழ்.அரச அதிபர் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,அப்பிரதேச மக்களுக்கு எந்தவிதமான உறுதி மொழிகளையும் அவர் வழங்கவில்லை.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுவிக்கப்படாத பகுதிகள் தொடர்பில் நான் இராணுவத்தினருடன் பேசி கொண்டே இருக்கின்றேன். இயலுமான பகுதிகளை அவர்களும் விடுவித்துக் கொண்டே இருக்கின்றனர். என்ன என்றாலும் என்னிடம் கோரிக்கை விடுங்கள் என்னால் முடிந்ததை மட்டுமே நான் செய்கின்றேன்.

பாதுகாப்பு தரப்பினர் எனக்கு அனுமதி வழங்காமல் நான் உங்களுக்கு மீளக்குடியமர்த்த முடியும் என வாக்குறுதி வழங்கமுடியாது. விடுவிக்காதவற்றை என்னால் அடித்து பறிக்க முடியாது என யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

அரச அதபரின் பதிலினால் மனம் பாதிப்படைந்த மக்கள் சாத்வீக வழியில் போராட்டம் நடாத்த போவதாக தீர்மானித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts