வலிகாமம் கல்வி வலயத்தில் சிங்கள தினப் போட்டிகள்!

Competition-Iconசிங்கள தினப் போட்டி வலிகாமம் கல்வி வலயத்தில் முதல் தடவையாக பெரும் எடுப்பில் அதிகளவான மாணவர்களின் பங்பற்றுதலுடன் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை மாணவர்களுக்கு இடையே இரண்டு நாட்கள் இடம்பெற்ற போட்டியில், சுமார் ஆயிரத்தி அறுநூறுக்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டதாக வலிகாமம் கல்வி வலய சிங்கள பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி சயந்தன் சிவசக்தி தெரிவித்தார்.

ஆரம்பப் பிரிவில் ஐம்பத்தி நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்தி இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களும் இடைநிலை மற்றும் மேற் பிரிவுகளில் இருபது பாடசாலைகளை சோ்ந்த முன்றூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.

மருதனர்மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற ஆசிரிய சிங்கள வளவாளர்களுடன் ஏனைய மாவட்டங்களில் உள்ள ஆசிரிய சிங்கள வளவாளர்களும் இணைக்கப்பட்டு மத்தியஸ்கள் தெரிவு செய்யப்பட்டு போட்டி இடம் பெற்றது.

போட்டியில் எழுத்தாக்கம், பேச்சு, கட்டுரை, நாடகம், குழுப்பாடல் என பல நிகழ்வுகளும் இடம் பெற்றன.

Related Posts