வலிகாமம் உதைபந்தாட்ட லீக் வெற்றி!

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட உதைபந்தாட்ட லீக்குகளுக்கு இடையே நடத்தப்பட்ட 19 வயதுப் பிரிவு ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் வெற்றி பெற்றுள்ளது.

football

மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற போட்டி ஆட்டத்தில் வடமராட்சி உதைபந்தாட்ட லீக் அணியும் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் அணியும் மோதிக் கொண்டன.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் சமபலம் பொருந்திய அணிகளாக காணப்பட்ட நிலையில் கடும் போட்டியாக காணப்பட்டது.

முதலில் 18ஆவது நிமிடத்தில் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் வீரர் தனுஜன் ஒரு கோலை அடித்து முன்னிலை பெற்ற போதிலும் முதல் பாதி ஆட்டம் முடிவடைய ஒரு நிமிடம் இருக்கையில வடமராட்சி லீக் அணி வீரர் குபேரலவன் ஒரு கோலை அடித்து சமநிலைப்படுத்திய நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் களமிறங்கிய போதிலும் போட்டி ஆரம்பமாகிய சில நிமிடத்திலேயே மைதானத்தின் ஆதிக்கத்தை வலிகாமம் அணி தனதாக்கிக்கொண்டது.

இந்நிலையில் இரண்டாவது மூன்றாவது கோல்களை ஜனார்த்தனன் பெற்றுக்கொள்ள அடுத்து இரண்டு கோல்களையும் முறையே தனேஸ், கிரிசாந் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். ஆட்ட நிறைவில் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் அணி 05:01 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Related Posts