வரம்பற்ற இணைய இணைப்பு வசதி ஏப்ரலில் கிடைக்கும்!!

வரம்பற்ற இணைய இணைப்புத் திட்டங்களை (Unlimited Internet Package) ஏப்ரல் மாதத்திற்குள் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மார்ச் 1ஆம் திகதிக்குள் வரம்பற்ற இணைய இணைப்புத் திடங்களை முன்வைக்க அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணித்திருந்தது.

அதற்கமைய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமர்ப்பித்த திட்டங்களை மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறதாகத் தெரிவித்துள்ள இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, ஏப்ரல் மாதத்திற்குள் முதல் சுற்று வரம்பற்ற திட்டங்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts