வயோதிபரின் சடலம் மீட்பு

body_foundகொக்குவில் கிழக்கு பொற்பதி வீதிக்குட்பட்ட பகுதியில் வயோதிபரின் சடலம் ஒன்று கோப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் கோப்பாய் பொலிஸாருக்க வழங்கிய தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை சடலத்தை மீட்ட பொலிஸார் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 65 வயது மதிக்கத்தக்கவர் என்றும் இரண்டு மூன்று நாட்களாக அந்தப் பகுதியில் குறிப்பிட்ட முதியவர் நடமாடியதாகவும் அப் பகுதியில் உள்ள மக்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts