வட மாகாணத்திற்கான தேசிய பல்வகைமை மாநாடொன்று சேவாலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை கோண்டாவிலில் அமைந்துள்ள சேவாலங்கா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுச் சூழல் மற்றும் புத்தாக்கல் எரிசக்தி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
இம்மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் வட மாகாணத்தில் சுற்றுச்சூழலை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மூன்று மாதகாலப் பகுதிக்குள் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் இதற்கான செயற்திட்டங்கள் துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார். அத்துடன் நாட்டிலேயே சுற்றுலாத்துறையில் அதிக வருமானம் பெறும் மாகாணமாக வடமாகாணம் உள்ளதெனவும் குறிப்பிட்டார்.
இம்மாநாடு 29, 30 ஏப்பிரல் 2013 ஆகிய இருதினங்கள் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், சேவாலங்கா நிறுவனத்தின் தலைவர் கர்ஷா குமார நவரட்ன, மதத்தலைவர்கள், சுற்றுச் சூழல் சார்ந்த உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.