வட்டுக்கோட்டையில் ஒருவர் கைது

jail-arrest-crimeபயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் (ரி.ஐ.டி) வட்டுக்கோட்டையில் வைத்து சனிக்கிழமை (22) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரும்பு வியாபாரியான மன்னாரைச் சேர்ந்த காந்தலயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ரி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து குறித்த நபர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சனிக்கிழமை (22) வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் காலையிலிருந்து மதியம் வரையிலும் இராணுவத்தினர் சுற்றுவளைப்புத் தேடுதல் ஒன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts