வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு

வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான நிதி தொடர்பிலான விபரம், வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக வடமாகாண பிரதம செயலக அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

north-provincial-vadakku-npc

வடமாகாண 2015ஆம் ஆண்டுக்கான நிதி விடயத்தில் மொத்த மூலதன செலவினங்களுக்கு 5287.8 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பிரமாண அடிப்படையிலான கொடைக்கு 400 மில்லியன் ரூபாவும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடைக்கு 1440 மில்லியன் ரூபாவும், ஏனைய கருத்திட்ட வேலைகளுக்கு 3447.8 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, வடமாகாண சபையில் சேவையிலுள்ள உத்தியோகத்தர்களுக்கான சம்பளங்கள், படிகளுக்கும் மற்றும் ஏனைய மீண்டும் வரும் செலவினங்களுக்குமாக 15,123 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிதி விபரம் அமைச்சரவை தீர்மானத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கு தீர்மானிக்கப்பட்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்படும்.

Related Posts