வடமாகாண ஆளுநரின் செயலாளரிடம் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து முன்னாள் இந்து கலாசார அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர் துவாரகேஸ்வரன் மீது அசிற் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் செயலாளரிடம் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 30ம் திகதி நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக தனது வாகனத்தில் வந்துகொண்டிருந்த துவாரகேஸ்வரன் வழி மறிக்கப்பட்டு, அவர் மீது அசிற் வீசப்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர் தற்போது கொழும்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான துவாரகேஸ்வரன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாக்கப்படுகின்றது.

இந்த முறைப்பாட்டில் ஆளுநரின் செயலாளரான முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் மீதே குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே குறித்த முன்னாள் இராணுவ மேஜயரும் தற்போதைய ஆளுநரின் செயலாளருமான குறித்த நபரிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் கடந்த 2நாட்களாக கடுமையான விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

மேலும் நேற்றய தினம் யாழ்.நகரை அண்டியுள்ள பகுதியொன்றில் வர்த்தக நிலையமொன்றை நடத்திவரும் துவாரகேஸ்வரனின் மைத்துனரிடம் தம்மை புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் அச்சுறுத்தும் தொனியில் நடந்து கொண்டிருக்கின்றனர்.

Related Posts