வடமாகாண அமர்வுகளில் கலந்து கொள்ள கமலுக்கு நீதிமன்றம் அனுமதி

kamal_epdpஇந்த மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் கமலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் லெனின் குமாரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் கமலுக்கு பூரண பாதுகாப்பு வழங்குமாறு யாழ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related Posts