வடமாகாண அஞ்சல் சேவையில் 10,355 மில்லியன் ரூபா வருமானம்

postofficeவடமாகாண அஞ்சல் திணைக்களம் 10,355 மில்லியன் ரூபா வருமானத்தினை கடந்த வருடத்தில் ஈட்டியுள்ளதாக வடமாகாண அஞ்சல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2012 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் அஞ்சல் திணைக்களம் தனது சேவையினை விஸ்தரித்த நிலையில், மின்பட்டியல் கட்டணமாக 604 மில்லியன் ரூபாவும் வெஸ்ரன் யூனியன் பணப்பரிமாற்றத்தின் மூலம் 12 மில்லியன் ரூபாவும் காசுக்கட்டளையின் மூலம் 6 மில்லியன் ரூபாவினையும் துரித தபால் சேவையின் மூலம் 22 மில்லியன் ரூபாவினையும் முத்திரை விற்பனையின் மூலம் 391 மில்லியன் ரூபா வருமானத்தினையும் பெற்றுள்ளதாக வடமாகாண அஞ்சல் திணைக்கள தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related Posts