வடமாகாணம் அனைத்து இனங்களையும் வரவேற்கும் மாகாணமாக இருக்க வேண்டும்: கோத்தபாய

Koththapaya-rajaவடமாகாணம் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாணம் அனைத்து இனங்களையும் வரவேற்கும் மாகாணமாக இருக்க வேண்டும்.

சிங்களவர்கள் அங்கு தங்களது காணிகளை கொள்வனவு செய்யக்கூடிய உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் சிங்களர்கள் சொந்த காணிகளை கொள்வனவு செய்து குடியேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோன்ற சிங்கள மற்றும் முஸ்லிம் அரசாங்க அதிகாரிகளும் வடமாகாண அரசாங்க காரியாலயங்களில் பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்றும் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Related Posts