வடக்கு கிழக்கு மக்களின் இதயம் எனக்கு தெரியும்:போர் வெற்றி விழாவில் ஜனாதிபதி

mahinda_rajapaksaவடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற வைபவத்தில் அதிதிகளின் வருகைக்கு பின்னர் குதிரைப்படை மற்றும் மோட்டார் படையணிகள் புடைச்சூழ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் பிரதான மேடைக்கு வருதைதந்தனர்.

அவர்களை பிரதமர் தி.மு.ஜயரட்னவும் அவரது பாரியாரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியாரும்; வரவேற்றனர்.

அதன் பின்னர் பாதுகாப்பு படைகளைச்சேர்ந்த 40 வீரங்கணைகள் தேசிய கீதமிசைக்க ஜனாதிபதியினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

முப்படைகளின் மரியாதையை ஏற்றுக்கொண்டதன் பின்னர் ஜனாதிபதி படைகளின் அணிவகுப்பை விசேட வாகனத்தில் சென்று பார்வையிட்டார்.

அதற்கு பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தாய் நாட்டை மீட்டெடுத்தமைக்கான வெற்றிவிழாவை நான்காவது ஆண்டாகவும் கொண்டாடுவதையிட்டு பெருமையடைகின்றேன்.

இலங்கை வரலாற்றில் தாய்நாடு ஒன்றிணைக்கப்பட்ட சிரேஷ்டத்துவமான சந்தரப்பமாகும். அதுமட்டுமன்றி மரணபயம் நீக்கப்பட்டு சுதந்திரமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த சிரேஷ்டத்துவமான சந்தர்ப்பமாகும்.

சிரேஷ்டத்துவமான சந்தர்ப்பமாகும்

அவற்றுகுக்கப்பால் மனித கேடயங்களாக தடுத்துவைக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களை மீட்டெடுத்த சிரேஷ்டத்துவமான சந்தர்ப்பமாகும்.

தாய்நாட்டை மீட்டெடுப்பதற்காக இலட்சக்கணக்கானோர் பலியானார்கள், கண்,காது, அவயவகங்களை இழந்தனர். இரத்தம் மற்றும் வியர்வையை பூமிக்கு பூஜை செய்தனர் என்றும் அவர் சொன்னார்.

அவ்வாறான சிரேஷ்டத்துவமிக்க படையினரை சிலர் சர்வதேச தூக்கு மேடைக்கு கொண்டுச்செல்வதற்கு முயற்சித்தனர். இன்னும் சிலரோ படையினருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான நலன்புரி விடயங்களை செய்துவருகின்றனர்.

எதிர்காலத்திலும் நம்பிக்கையுடன் நாட்டுக்கு சேவையாற்றுவோம் என்ற மனநிலையை நாம் வருகின்றோம். அதற்கான சேவைகளையே நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

தாக்குதல்கள் நடத்தப்பட்டன

ஒரு காலத்தில் காலி முகத்திடல் மூடப்பட்டிருந்தது. மத்தியவங்கி கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. அதற்கு அருகிலிருக்கின்ற ஜனாதிபதி மாளிகைக்கும் குண்டு லொறி அனுப்பப்பட்டது. அவற்றுக்கு அருகிலிருக்கின்ற ஹோட்டல்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இன்னும் சுகமடையவில்லை

அனுராதபுரம் மகாபோதி விஹாரையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 1990 களில் காத்தான்குடியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாத்தறையில் நடாத்தப்பட்ட முஸ்லிம் பேரணியின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் இன்னும் சுகமடையாத நிலையில் இருகின்றார்.

இடங்களை அடையாளப்படுத்திய விதம்

நாட்டில் பல இடங்கள் மற்றும் சந்திகள் புலிகளினால் தாக்குல்கள் நடாத்தப்பட்ட சந்திகளாவும் இடங்களாகவுமே அடையாளம் காணப்பட்டன. அவ்வீதியாக அந்த இடங்களை கடந்து செல்கையில் இந்த இடத்தில் தான் ஜனாதிபதி பிரேமதஸா கொல்லப்பட்டார். இந்த சந்தியில் தான் பாரமி குலத்துங்க கொல்லப்பட்டார் என்று அடையாளப்படுத்துகின்றனர். என்னிடம் சில இடங்களை அடையாளப்படுத்தினர்.

நாட்டில் எங்கும் எவ்விடத்திற்கும் சென்று எதனையும் செய்யும் வகையில் புலிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட காலமொன்றும் இதயத்தில் மரணபயமிருந்த நாடாகவும் இந்நாடு இருந்தது. மக்களை மீட்டெடுப்பதற்கு யாருமே முன்வரவில்லை.

சமாதானத்திற்காக அழைத்துவந்தவரை கொலைச்செய்தனர்

மக்கள் தாக்கப்பட்டபோது 5/6 அதிகாரத்துடன் இருந்த ஜனாதிபதி மக்களே தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டார். புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்துதவிய ஜனாதிபதி புலிகளினாலேயே கொல்லப்பட்டார்.
புலிகளின் குண்டுத்துளைக்காத ஆடையை வழங்கி சமாதானத்திற்கு அழைத்துவந்த இந்திய பிரதமரையும் புலிகள் இந்தியாவில்வைத்தே கொலைச்செய்தனர்.

நம்பிக்கையூட்டினோம்

புலிகளுடன் மோதவேண்டாம் அவர்கள் கேட்பதைகொடுக்குமாறு சர்வதேசம் எங்களிடம் அடிக்கொருத்தடவை கேட்டது. எனினும், நாம் இளைஞர்களின் சக்தி மற்றும் வீரத்தில் நம்பிக்கைக்கொண்டோம். பயத்தை இல்லாது செய்து நம்பிக்கையூட்டினோம்.

அவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி சிறுபிள்ளைகளின் இதயங்களுக்கே நன்றாக புரிகின்றது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக நாட்டை பிரித்து கொடுக்கவும் முயற்சித்தனர். அவ்வாறானவர்களே குளங்களை கட்டிய மன்னனான மஹாசேனனின் பெயரை புயலுக்கு சூட்டுமாறு 2003 ஆம் ஆண்டு பரிந்துரை செய்தனர்.

நாட்டை முன்னோக்கிய யுகமாக மாற்றவேண்டும்

யுத்தம் செய்த யுகமாக அல்ல, டயர்கள் போட்டப்பட யுகமாக அல்ல, யுத்தம் நிறைவடைந்த, இரத்த கங்கை நிறுத்தப்பட்ட யுகம் மற்றும் நாட்டை முன்னோக்கிய யுகமாக மாற்றவேண்டும்.

வடமாகாணத்தை பொறுத்தவரையில் 12 கட்சிகள் தங்களுடைய அரசியல் செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுக்கின்றனர். பயந்துக்கொண்டு கொழும்பிலிருந்து அன்று அரசியல் செய்தவர்கள் இன்று எவ்விதமான அச்சமும் இன்றி அரசியல் செய்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்தவர்களும் முன்வரவில்லை

வடக்கு கலாசாரத்தை நாசப்படுத்துவதற்கு பிரபாகரனும் புலம் பெயர்ந்தவர்களும் முயற்சித்தனர். மனித கேடயங்களாக தடுத்துவைக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்தபோது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. புலம்பெயர்ந்தவர்களும் முன்வரவில்லை அவர்களுக்கு இராணுவமும் அரசாங்கமுமே உணவுக்கொடுத்தது.
தூக்குமேடை வரை செல்லவேண்டியவர்களுக்கு நாம் மன்னிப்புக்கொடுத்தோம். பலர் புனர்வாளிவளிக்கப்பட்டுள்ளனர். வேறு நாடுகளில் இவ்வாறான நடைமுறை இல்லை என்றும் அவர் கூறினார்.

சிவில் படைக்கு தமிழர்கள் 4000 பேரை இணைத்துள்ளோம். முப்படைகளிலும் இணைவதற்கு வரிசைகளில் நிற்கின்றனர். படைகளில் தமிழர்கள் இணைவதை தெற்கில் உள்ளவர்கள் எதிர்க்கவில்லை வடக்கில் உள்ள சிலரும் புலம்பெயர்ந்தவர்களுமே எதிர்த்தனர். அதனால் தான் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது கிளிநொச்சியில் அந்த பிரேரணைக்கு எதிராக மக்கள் அணித்திரண்டு எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு கிழக்கு மக்களின் இதயங்களை நான் நன்கறிவேன். ஒருத்தேர்தலில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தனர்.

காலத்திற்கு காலம் புரட்சி,ஊடகசுந்திரம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் குரல்கொடுப்பர் அதகெல்லாம் நான்கு மாதங்களுக்கு ஒருதடவை நாங்கள் பதிலளித்து கொண்டிருக்கின்றோம் என்பதுடன் ஒரு அங்குலத்தையேனும் பறிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் இடமளியேன் என்றார்.

Related Posts