வடக்குத் தேர்தலுக்கு பயப்படும் நீங்கள் தமிழரின் அச்சம் பற்றி சிந்தித்தீர்களா?இனவாதத் தலைவர்களிடம் மனோ கேள்வி

Mano_Ganesan_2_0

வடக்கு மாகாண சபை கூட்டமைப்பின் கரங்களுக்கு போவது தொடர்பில் சிங்கள மக்களுக்கு அச்சம் உள்ளது என்று திரும்பத் திரும்பக் கூறுகின்றீர்கள். ஆனால் தமிழர்களின் அச்சம் பற்றி என்றாவது சிந்தித்துப் பார்த்தீர்களா?

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அதிகாரத்தையும், பலமிக்க நாடாளுமன்றத்தையும், முப்படைகளையும் வைத்திருக்கும் உங்களுக்கு அச்சம் இருந்தால் இன்று தமிழர்களுக்கு, தமது எதிர்காலம் தொடர்பில் எந்தளவு அச்சம் இருக்கும் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கின்றீர்கள்?

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது: இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று பொதுபல சேனாவின் ஞானசார கல பொட தேரர் கூறுகிறார்.

Related Posts