வடக்கில் இராணுவக் குறைப்பு! ஜேர்மன் தூதுவரிடம் யாழ்.கட்டளை தளபதி!

mahinda_hathurusingheயாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் டாக்டர் ஜெர்கன் மொர்ஹார்டிற்கு யாழ் கட்டளைத் தளபதியினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்துள்ள ஜேர்மன் தூதுவர் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுபோது இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி, புனர்வாழ்வு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை Bob Marley Songs நடத்தப்பட்டுள்ளதுடன் யுத்தத்தின் பின்னர் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளில் படையினர் பாரியளவு பங்களிப்பு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts