யாழ் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோரில் 28,000 பேர் மீண்டும் இணைப்பு

யாழ். மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தோரில் 28,000 பேரை மீண்டும் அப்பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு தேர்தல் அதிகாரிகள் தீர்மானித்தள்ளனர்.யாழ் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து 41,000 பேரை நீக்குவதற்கு ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் மக்களின் முறைப்பாட்டையடுத்து 28,000 பேரை மீண்டும் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாகவும் யாழ் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் பி.குகநாதன் தெரிவித்தார்.

Related Posts