யாழ். முஸ்லிம் வர்த்தகர்களுக்கான வர்த்தக சங்க அங்குரார்ப்பணமும் பொது கூட்டமும் யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெற்றது.
யாழ். முஸ்லிம் வர்த்தகர்களின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ் மற்றும் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன தலைவர் எச்.எம்.நிலாம், லாபீர் , நாவாந்துறை பள்ளி மௌலவி முஹமட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
யாழ். முஸ்லிம் வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கைகளின் போது எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கத்துடனும் தமது வர்த்தக சமூகத்தினை பாதுகாக்கும் நோக்குடனும் வர்த்தக சங்கம் அமைப்பதற்கான அங்குரார்ப்பண பொதுக்கூட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இக்கூட்டத்தின்போது தற்காலிகமாக 13 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் முதலாவது கூட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் அங்கத்துவர்களை தெரிவு செய்வதென வர்த்தகர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ். முஸ்லிம்களினால் முதன் முதலாக இந்த வர்த்தக சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.