யாழ். மாவட்டத்திற்கு 129 புதிய கிராம அலுவலர்கள்

Suntharam arumai_CIயாழ். மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 129 கிராம அலுவலர்களுக்கான 03 மாதகால பயிற்சி நேற்றய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இலங்கையில் புதிய கிராம அலுவலர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நியமனங்களை அண்மையில் ஜனாதிபதி வழங்கிவைத்தார். இதில் 129 கிராம அலுவலர்கள் யாழ். மாவட்டத்துக்கு நியமனம் பெற்றுள்ளதாகவும் இப்பயிற்சியின் ஆரம்ப நிகழ்வில் அவர் கூறினார்.

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு 03 பேரும் சங்கானை பிரதேச செயலகத்திற்கு 07 பேரும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு 07 பேரும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு 08 பேரும் உடுவில் பிரதேச செயலகத்திற்கு 12 பேரும் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு 6 பேரும் கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு 12 பேரும் மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு 09 பேரும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு 13 பேரும் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு 18 பேரும் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு 10 பேரும் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு 12 பேரும் வேலணை பிரதேச செயலகத்திற்கு 08 பேரும் நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு 03 பேரும் காரைநகர் பிரதேச செயலகத்திற்கு ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

03 மாத பயிற்சியின்போது இவர்களுக்கு 3,000 ரூபா மாதாந்தச் சம்பளமாக வழங்கப்படும். 03 மாத பயிற்சியின் பின்னர் 02 வாரங்கள் யாழ். மாவட்ட செயலகத்தில் கடமையாற்ற வேண்டும். இதனைத் தொடர்ந்து, யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலுமுள்ள கிராம அலுவலகர் பிரிவுகளில் கடமையாற்றுவதற்கான நியமனங்கள் வழங்கப்படுமெனவும் அவர் கூறினார்.

Related Posts