யாழ். மாநகரசபை கீதத்தினை மீள்பதிவு செய்ய தீர்மானம்

Yogeswary_150newsயாழ். மாநகர சபை கீதத்தினை மீள் பதிவு செய்ய யாழ். மாநாகர சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ். மாநகர சபை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்;கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் யாழ்.மாநகர சபை கீதம் உணர்வு பூர்வமாக அமையவில்லை என்றும் கீதத்தில் பல மாற்றங்கள் செய்வேண்டுமென்றும், கீதம் 2 அல்லது 3 நிமிடங்களில் இருக்ககூடியவாறும், புதிய தொழில் நுட்பத்திற்கு அமையவும், அதே இராக, தாளத்தில், வரிகளை மாற்றியமைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்ததுடன், உறுப்பினர்களின் கருத்துக்களை முன்வைக்குமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இதற்கமைய மாநகர சபை மன்றில் கீதம் ஒளிபரப்பப்பட்டது. சுமார் 5 நிமிடங்களைக் கொண்ட கீதத்தினை, விழுமியங்களை பேணும் வகையில், கீதத்தினை பத்திரிகையில் விளம்பரம் செய்து, கவிஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் ஒத்துழைப்புடனும், கலைஞர்களின் வரிகளையும் ஏற்றுக்கொண்டு மாற்றீடு செய்து மீள்பதிவு செய்ய வேண்டுமென அனைத்து உறுப்பினர்களும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

கீதத்தினை மீள்பதிவு செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், கலைஞர்கள் மற்றும் கவிஞர்களின் கருத்துரைகள் சொற்பதங்கள் மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில், ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இருக்கும் பட்சத்தில் சிறந்த கருத்துரைகளுக்கு பரிசில்களும் வழங்கவுள்ளதாகவும் யாழ். மாநகர முதல்வர் மேலும் கூறினார்.

Related Posts