யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் ஒருமணி நேர வேலை நிறுத்தப் போராட்டம்

nures-hispitalஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து யாழ்.போதானாவைத்தியசாலை தாதியர்கள் இன்று ஒரு மணித்தியால கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று மதியம் 12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரை இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘வேலை நாளை வாரத்திற்கு ஐந்து நாளாக மாற்று’, ’12 வருடத்தில் முதலாம் தரத்திற்கு உயர்த்து’, ‘மாகாண ரீதியான தாதியர் ஆட்சேர்ப்பை உடன் நிறுத்து’ போன்ற பல்வேறு வாசகங்களைத் தாங்கியவாறு இந்த போராட்டதை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, 200 மேற்பட்ட தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Posts