யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுவர் புற்றுநோய் விடுதி திறப்பு

daklas-hospitalயாழ். போதனா வைத்தியசாலையில் சிறுவர் புற்று நோய் விடுதி நேற்று திறந்து வைக்கப்பட்டது. பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா இன்று காலை 11.30 மணியளவில் சம்பிரதாய பூர்வமாக நாடாவெட்டி திறந்துவைத்தார்.

சர்வதேச றோட்ரி கழகமும், கலர் ஒப் கரேஸ் இணைந்து யாழ். குழந்தை மருத்துவ அலகிற்காக யாழ். போதனா வைத்தியசாலையின் 26 ஆம் விடுதியில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்நிகழ்வில், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜா, மேலதிக பணிப்பாளர் செ.ஸ்ரீ பவானந்தராஜா உட்பட குழந்தை மருத்துவர் கீதாஞ்சலி மற்றும் றோட்ரி கழகத்தின் தலைவர் மற்றும் கலர் ஒப் கரேச் தலைவர், வைத்திய அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts