யாழ். பிரிமியர் லீக் (ஜேபிஎல்) போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்ரலைட்ஸ் விளையாட்டுக்கழகமும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.முதலில் துடுப்பெடுத்தாடிய சென்ரலைட்ஸ் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது.
இவ் அணியில், வதுசனன் 23, ஜெனோஜன் 18, கோகுலன், செல்ரன் தலா 16 ஓட்டங்களை பெற்றதுடன் உதிரிகளாக 9 ஓட்டங்களும் பெறப்பட்டன.கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்ழகத்தைச் சேர்ந்த பிரதீஷ் கிருபவன் தலா 4 ஒவர்கள் பந்து வீசி முறையே 21, 22 ஓட்டங்களைக் கொடுத்து தலா 2 விக்கெட்டுக்களையும் சாம்பவன் ஜனுதாஸ் தலா 4 ஓவர்கள் பந்து வீசி முறையே 41, 21 ஓட்டங்களைக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
135 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமுக அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.இவ் அணியில் ஜெரூபன் 49 பந்துகளில் 6 ஆறுகள் 5 நான்குகள் உள்ளடங்களாக 54 ஓட்டங்களையும் ஜனுதாஸ் 29, பங்குஜன் 21 ஓட்டங்களை பெற்றதுடன் உதிரிகளாக 9 ஓட்டங்களும் பெறப்பட்டன.
சென்ரலைட்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த கோகுலன 3 ஓவர்கள் பந்து வீசி 31 ஒட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.போட்டியின் ஆட்ட நாயகனாக கொக்குவில் மத்திய விளையாட்டுக் கழகத்தைச் சோந்த ஜெயரூபனும் போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழ