யாழ். பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு டெங்கு காய்ச்சல்

maleriya-mosquto-denkuயாழ். பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மந்திகை வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதாரண காய்ச்சல் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே இவருக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வைத்தியசாலையில் 3 தினங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பெற்றுகொண்ட நிலையில் வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பணிப்பாளருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts