யாழ்.பல்கலை.மாணவர் ஒன்றியச் செயலர் தாக்கப்பட்டதை பீடாதிபதிகள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த தாக்கப்பட்ட சம்பவத்ததை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரும் அனைத்துப்பீடாதிபதிகளும் வன்மையாக கண்டித்துள்ளனர்.இத்தாக்குதலால் மாணவர்கள் அச்சமும் கவலையும் அடைந்துள்ளனர் எனவும் இவ்வாறான செயற்பாடுகள் பல்கலைக்கழக சுமூகமான செயற்பாட்டிற்கு உதவப்போவதில்லையெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் பாதுகாப்பிற்கும் பல்கலைக்கழகத்தின் சுமுகமான செயற்பாட்டிற்கும் அனைத்து தரப்பினரும் உறுதுணையாகச் செயற்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.சம்பவ தினத்தன்று எந்தவிதமான கலந்துரையாடல்களும் இன்றி மாணவர்கள் துணைவேந்தரது அலுவலகத்தை தாக்கிய செயலுக்கும் அவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

Related Posts