யாழ். பல்கலைக்கலைக்க மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு தொடர்ச்சியாகஅச்சுறுத்தல் விடுக்கப்படுவதைக் கண்டித்து நாளையும், நாளை மறுதினம் அனைத்துப் பீட மாணவர்களும் தமது வகுப்புக்களைப் பகிஷ்கரிக்கவுள்ளனர் எனப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
யாழ். பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், மாணவத் தலைவர்கள், ஊடகவியலாளர்களது பெயர்கள் குறிப்பிட்டு ‘தேசம் காக்கும் படை’ என்ற பெயரில் துண்டுபிரசுரங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகச் சூழலில் ஒட்டப்பட்டிருந்ததும்,பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர். இராசகுமாரனை கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு தலைமையகமான 4ஆம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
பல்கலைகழக சூழலில் பதட்டம்,அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல்!
4 ஆம் மாடிக்கு வருமாறு இராசகுமாரனுக்கு அழைப்பு
நினைவேந்தலை கைவிடுங்கள்! நிகழ்ந்தால் இராணுவம் தலையிடும்!- யாழ். இராணுவத்தளபதி