பாக்கு நீரிநிணையில் இந்திய இலுவைப் படகுகளின் செயற்பாட்டினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் குறித்த கருத்துப்பட்டறை திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இந்த விடயத்தில் ஆர்வமுள்ள கல்வியலாளர்கள், ஆய்வாளர்கள், கடற்தொழில் சமூகத்தினர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
யுத்தகாலத்தில் கடலுக்குச் செல்லமுடியாதிருந்த கடற்தொழிலாளர்கள் தற்போது இந்திய டோலர்களின் வருகையால் தங்கள் தொழில சீரான முறையில் மேற்கொள்ளமுடியாத நிலையில் உள்ளனர்.
அத்துடன் மீனவர்களின் வளங்களும் அழிக்கப்படுவதோடு கடல் சூழலியல் வளங்களும் அழிவடைந்து செல்கின்றது இதனை எவ்வாறு தடுப்பது அதற்கு கையாள வேண்டிய பொறிமுறைகள் பற்றியும் அந்த கருத்துப்பட்டறையில் ஆராயப்பட்டுள்ளது.
இதில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வி அரசரெட்ணம் அவர்கள் தனது உரையில்
முப்பது வருட யுத்த்திற்கு முன்னர் இருநாட்டு மீனவர்களிடத்திலும் ஒரு புரிந்துணர்வு இருந்து வந்துள்ளது இதன் காரணமாக இங்குள்ளவர்கள் தென்னிந்தியாவிற்கு சென்றும் அங்குள்ளவர்கள் இங்கு வந்தும் தொழில் செய்யக் கூடிய நிலை இருந்தது. பின்னர் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அந்த புரிந்துணர்வுத்தன்மை அற்றுப்போய்விட்டது என்றார்.
அத்துடன் முப்பது வருட யுத்த சிந்தனையில் இருந்து நாங்கள் அனைவரும் விடுபடவேண்டும் அவ்வாறு விடுபட்டு இந்த மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்கான அரசியல் வாதிகள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் இந்த பிரச்சனைக்கு முகம்கொடுத்து வருகின்ற ஒன்றாக இணைந்து இதற்கு தீர்வுகாண வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.