யாழ்.நகரில் ரூ.500 மில்லியன் செலவில் கார்கில்ஸ் கட்டிடத் தொகுதி

cargillsயாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்டு வரும் கார்கில்ஸ் நிறுவனத்தின் பல்பொருள் அங்காடி மற்றும் கேளிக்கை கட்டிடத் தொகுதியின் நிர்மாணப்பணிகள் இவ்வருட நடுப்பகுதியில் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
80 பேர்ச் நிலத்தில் 4 மாடிக் கட்டிடமாக இந்தக் கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இக்கட்டிடத் தொகுதியில் வங்கி, உணவுச்சாலை, 3 திரை அரங்குகளுடன் கூடிய சினிபிளெக்ஸ் மற்றும் கார் நிறுத்துமிடம் என்பன அமையவுள்ளன.

இந்த 500 மில்லியன் ரூபா முதலீட்டுடன் கார்கில்ஸானது பாரிய தனியார் பிரிவு முதலீட்டாளர்களில் ஒன்றாக இலங்கையின் வட மாகாணத்தில் திகழவுள்ளதாக கார்கில்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரான இம்தியாஸ் வஹீட் தெரிவித்துள்ளார்.

Related Posts