யாழ். நகரில் மீண்டும் தீவிர சோதனை நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதையடுத்து யாழ்ப்பாண பொலிஸார் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

நாடுமுழுவதும் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் முன்னெடுத்துவரும் நிலையில் இந்த பரிசோதனை இன்று யாழ். நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னர் நாட்டின் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் தளர்த்தப்படாத போதும் மக்களின் நடமாட்டம் அதிகரித்தமையைத் தொடர்ந்து பொலிஸார் தீவிரமாக சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, 30 இற்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts