யாழ். தொண்டர் ஆசிரியர்களை பதியுமாறு அறிவிப்பு

kamal_epdpயாழில் இதுவரை நியமனம் கிடைக்கப் பெறாத தொண்டர் ஆசிரியர்கள், சுகாதார தொண்டர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களை பதிவு செய்யுமாறு ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இதுவரை நியமனம் கிடைக்கப் பெறாத தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள் ஆகியோர் தமது விண்ணப்ப படிவங்களை இம்மாதம் 11ஆம் திகதிக்கு முன்னதாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவுகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் மேற்கொள்ளுமாறும் கந்தசாமி கமலேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts