இன்று யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதி மகிந்தவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் அரச ஊடகங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்ட போதிலும் யாழ்.ஊடகங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் யாழ்.வந்த ஜனாதிபதி மகிந்த யாழ்.பிரதான புகையிரத நிலையத்தை திறந்து வைத்தார். அதுமட்டுமல்லாது யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் கலந்து கொண்ட நிகழ்வுகளில் அரச ஊடகவியலாளர்களுக்கே முன்னுரிமையுடன் அனுமதியும் வழங்கப்பட்டது.
இதேவேளை யாழ்.ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.