யாழ் இந்துக் கல்லூரியின் 32 ஆவது வீதியோட்டம்…

வெள்ளிக்கிழமை (03-02-2012) காலை 6.00 மணியளவில் யாழ் இந்துக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் முதல் நிகழ்வான 32ஆவது வீதியோட்டம்(5km) நடைபெற்றது. இந்நிகழ்வு இளநிலைப் பிரிவு, முதுநிலைப் பிரிவு எனும் இரு கட்டங்களாக நடைபெற்றன. முதலாவதாக நடைபெற்ற இளநிலைப் பிரிவு போட்டியை யாழ் இந்துக் கல்லூரியின் இங்கிலாந்து பழையமாணர்சங்கத்தலைவர் திரு..P.விவேகானந்தா ஆரம்பித்து வைத்தார். அதன்பின் நடைபெற்ற முதுநிலைப் பிரிவு போட்டியை யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் திரு.சண்.தயாளன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இப் போட்டியில் இளநிலைப் பிரிவில் பசுபதி இல்லத்தை சேர்ந்த க.சுபராஜ் (21m.17s) முதலாம் இடத்தையும், ம.சரண்ஜன் (22m.04s) இரண்டாம் இடத்தையும், சபாபதி இல்லத்தை சேர்ந்த வி.நவநீதன் (22m.14s) மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். இதே போன்று முதுநிலைப் பிரிவில் செல்லத்துரை இல்லத்தை சேர்ந்த சி.சிவகான் (21m.05s) முதலாம் இடத்தையும்,வி.ஜனார்த்தனன் (21m.35s) இரண்டாம் இடத்தையும், காசிப்பிள்ளை இல்லத்தை சேர்ந்த இ.ஜெசிந்தன் (22m.03s) மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

Related Posts