யாழ்ப்பாணத்தில் மின்தடை

CEBவீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்த வேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் 30.01.2013 புதன்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மாலுசந்தி முதல் மடத்தடி வரையான பிரதேசம், கம்பர்மலைப் பிரதேசம், வடமராட்சி கிழக்கு, நயினாதீவுப் பிரதேசம் முழுவதும், அராலி வடக்கு, அராலி தெற்கு, அராலி கிழக்கு பிரதேசங்கள், அராலி மேற்குப் பிரதேசத்தின் ஒரு பகுதி, உடுப்பிட்டி ஒரு பகுதி, தொண்டமனாறு, வல்வெட்டி, வல்வெட்டித்துறை ஆகிய இடங்களிலும் மின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

31.01.2013 வியாழக்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் சாமியன் அரசடிப் பிரதேசம், சம்பந்தர்கடைப் பிரதேசம், நயினாதீவுப் பிரதேசம் முழுவதும் ஆகிய இடங்களிலும்

01.02.2013 வெள்ளிக்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் நயினாதீவுப் பிரதேசம் முழுவதும், அராலி வடக்கு, அராலி தெற்கு, அராலி கிழக்கு பிரதேசங்கள், அராலி மேற்குப் பிரதேசத்தின் ஒரு பகுதி, உரும்பிராய், ஊரெழுப் பிரதேசத்தின் இரு பகுதி, ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Related Posts