யாழ்ப்பாணத்திலிருந்து கோண்டாவிலுக்கு பரீட்சார்த்த ரயில் சேவை!

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கோண்டாவில் புகையிரத நிலையம் வரையான புகையிரத பரீட்சார்த்த சேவை நடைபெற்றது.

கடந்த 13ஆம் திகதி பளை வரை நடைபெற்ற புகையிரத சேவை ஜனாதிபதியினால் யாழ்ப்பாணத்திற்கு நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரையான புகையிரத சேவையை நீடிப்பதறக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கோண்டாவில் வரையான புகையிரதப் பாதை அமைக்கப்பட்டு நிறைவடைந்துள்ள நிலையில் அதனை சரிபார்க்கும் வண்ணம் பொருள்களை ஏற்றிய புகையிரதம் கோண்டாவில் வரை வந்து திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வருட இறுதிக்குள் காங்கேசன்துறை வரையான புகையிரத சேவையும் ஆரம்பிக்கப்புடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை வரையான புகையிரதப் பாதைகள் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தபட்டுள்ள போதிலும் பல இடங்களில் புகையிரத நிலையங்கள் அமைக்கும் பணிகள் இடம்பெறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts