யாழ்ப்பாண மாவட்டத்தில் 1 இலட்சத்து 35 ஆயிரத்து 113 குடும்பங்களுக்கு முதல்கட்டமாக 5ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் மகேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொள்ளும், 76 ஆயிரத்து 32 பயனாளிகளுக்கும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள 11 ஆயிரம் குடும்பத்தினர் உட்பட 1 இலட்சத்து 35 ஆயிரத்துக்கு 113 குடும்பங்களுக்கு முதலாவது கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலாவது கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் பெற்ற அனைவருக்கும் இரண்டாவது கட்ட நிதியினை வழங்கும் செயற்பாடுகள் இன்றைய தினம் பிரதேச செயலகங்கள் ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் மகேஸ்வரன் தெரிவித்தார்.