யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட நாவாந்துறை, பொம்மவெளி பகுதியில் வசிக்கும் மேலும் 200 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.
ஏற்கனவே 100 குடும்பங்கள் வரையில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 200 குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்குள் காணப்படும் வெள்ளநீரை பாரிய இயந்திரங்கள் மூலம் வெளியேற்ற முடியாதுள்ளது. பாரிய இயந்திரங்களை அப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியாதவாறு வெள்ளம் காணப்படுகின்றது.
இதனால் மனித வலுவை பயன்படுத்தி வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அவர் கூறினார்.
அத்துடன், அம்மக்களின் உடனடி தேவையான உலர் உணவு நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை (21) முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.