யாழில் பாடசாலை மாணவிக்கு அங்க சேட்டை செய்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் பாலியல் ரீதியில் தொடுகை செய்துள்ளதாக குறித்த மாணவியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, இரு மாணவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மாணவி, தன்னை தொடர்ச்சியாக இந்த இரு மாணவர்கள் தன்னிடம் பகிடிவதை செய்வதாகவும் தன் பொறுமையாக சென்று வருவதாவும் தன்னால் பொறுக்க முடியாத நிலையிலேயே தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த சில சம்பவங்களை கூறியதாக அந்த மாணவி பாடசாலை நிர்வாகத்திடம் கூறினார்.
தனது மகளை பாலியல் ரீதியில் சேட்டை விடும் மாணவர்கள் இருவர் குறித்து பாடசாலை நிர்வாகத்திடம் முறையிடப்பட்டது. இருந்தும் நிர்வாகத்தினர் இதனை பெரிதாக்க வேண்டாம் எனக் கூறியதுடன், இரு மாணவர்களையும் தண்டிக்கத் தவறியுள்ளனர்.
இதன் காரணமாகவே பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இந்த மாணவர்கள் இருவர் விசாரணைக்காக பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.