யாழில் சைக்கிள்களுக்கு ஒளித்தெறிப்பு தாள்களை ஒட்டும் பொலிஸார்

jaffna-policeயாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒளித்தெறிப்பு இல்லாத சைக்கிள்களுக்கு ஒளித்தெறிப்பு தாள்களை ஒட்டும் நடவடிக்கையை யாழ். பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் சனிக்கிழமை மேற்கொண்டுள்ளனர்.

இரவு வேளைகளில் இடம்பெறக்கூடிய வீதி விபத்துக்களை தவிக்கும் வகையிலேயே ஒளித்தெறிப்பு இல்லாத சைக்கிள்களுக்கு ஒளித்தெறிப்பு தாள்கள் ஒட்டப்பட்டன.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சைக்கிள்களுக்கு ஒளித்தெறிப்பு தாள்கள் ஒட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சைக்கிள்களுக்கு ஒட்டுவதற்கான மஞ்சள் நிறத்திலான ஒளித்தெறிப்பு தாள்களை யாழ்ப்பாணம் வணிகர் கழகம் வழங்கி உதவியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

Related Posts