யாழில். சிறுகுற்றம் புரிந்த 189பேர் கைது

arrest_1யாழில் சிறுகுற்றங்கள் புரிந்த 189பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 28 பேரும், அடித்து காயம் ஏற்படுத்தியவர்கள் 44, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 10பேர், குடிபோதையில் கலகம் விளைவித்த 01, மதுபோதையில் வாகனம் செலுத்திய 10, திருடிய குற்றச்சாட்டில் 08, பொது இடத்தில் மது அருந்திய 02, வீதி விபத்து 01, பொது இடத்தில் கலகம் விளைவித்த 11, பணமோசடி 01, கசிப்பு 04, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் 03, அனுமதி பத்திரமின்றி சாராயம் விற்பனை செய்தவர்கள் 10, கொள்ளையடித்தவர்கள் 02, திருட்டு மின்சாரம் பெற்றவர்கள் 12, ஏனைய குற்றங்களுக்காக 42 பேருமாக மொத்தம் 189பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts