யாழில் கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களில் 11 பேர் கைது

arrest_1யாழ். கொடிகாமம் பகுதியில் வைத்தியலிங்கம் அமிர்தலிங்கம் என்பவரை பொல்லால் தாக்கி மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 5 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த 2012 பெப்ரவரி 14ஆம் திகதி வீதியால் சென்றுகொண்டிருந்த வேளையில் பொல்லால் தாக்கிய மரணம் விளைத்த சந்தேக நபர்கள் தலைமறைவாகியிருந்தனர். பின்பு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதேவேளை, மானிப்பாய் பகுதியில் 15 வயது சிறுமியை வல்லுறவு செய்த 4 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலும் வேலணைப்பகுதியில் 15 வயது சிறுமியை வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் 19 மற்றும் 20 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இன்னும் இருவர் கைதுசெய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts