யாழில் காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரிப்பு

warning_signயாழில் காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிமாக பொருட்களை விற்பனை அதிகரித்து வருகின்றது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் இன்று தெரிவத்தார்.

யாழ். மற்றும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றிற்குட்பட்ட பகுதிகளில் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் பரிசோதனை மேற்கொண்ட போது, காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 20 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களுக்கு எதிராக யாழ். மற்றும் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 20 வர்த்தகர்களும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

அந்தவகையில், மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய 19 வர்த்தகர்களுக்கு 50,000 ரூபா அபராதமும் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய ஒரு வர்த்தகருக்கு 10 ஆயிரம் அபராதம் அறவிடப்பட்டதாக அவர் கூறினார்.

இதேவேளை, வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதால் நுகர்வோர்கள் பொருட்களின் தரத்தினையும், பொதியிடப்பட்ட திகதி மற்றும் முடிவுத் திகதி என்பவற்றினை பரிசோதனை செய்து பெற்றுக் கொள்ளுமாறு அவர் மேலும் கூறினார்.

Related Posts