யாழில் காற்றுடன் கூடிய மழை மேலும் ஒரு கிழமைக்கு தொடரும்

rainயாழ்ப்பாணத்தில் தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்ற நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை 54.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய அவதானிப்பாளர் ஜே.டி.நுவான் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை 79.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

காற்றுடன் கூடிய மழையானது மேலும் ஒரு கிழமைக்கு தொடருமெனவும் அவர் கூறினார்.

Related Posts