யாழில் காசோலை மோசடிகள் அதிகரிப்பு

cheque forgeryயாழ். மாவட்டத்தில் கடந்த வாரங்களில் காசோலை மோசடி தொடர்பாக அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜெஃப்ரி தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதிப் பகுதியில் இரண்டு இலட்சம் ரூபா காசோலை மோசடி செய்துவிட்டு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார் என்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது போன்று வல்வெட்டித்துறைப் பகுதியிலும் கடந்த நாட்களில் ரூபா 8 லட்சம் காசோலை மோசடி செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனவே இவ்வாறான காசோலை மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்து கிடைக்கப்பெற்ற வண்ணமுள்ளன. இவை தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மக்கள் தாம் பணத்தை எவறிடம் கொடுக்கிறோமோ அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதில் மிகத்தெளிவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Related Posts