மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கோரோனா பரவல் தொடர்சியில் மேலும் 49 பேர் இன்று கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை இராணுவத் தளபதி தெரிவித்தார்.
அவர்களில் 32 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள். ஏனைய 17 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோரோனா தொற்றினை அடுத்து ஆயிரது 446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நாட்டில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 893ஆக உயர்ந்துள்ளது.