முஸ்லிம்களின் நலன்புரிக்காக 20 மில்லியன் ஒதுக்கீடு- தேர்தலில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்தால் பலாலியில் மீள்குடியேற்றம்: டக்ளஸ்

daklasயாழ்ப்பாண முஸ்லிம்களின் நலன்புரிக்காக 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் நலன்களை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களுக்கு இந்திய உதவியின் கீழ் 257 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

போர் இடம்பெற்ற காலத்தில் வடக்கை விட்டு வெளியேறிய முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் அனைத்து இன மக்களும் இலங்கையர் என கருதப்பட வேண்டும்.

போர் இடம்பெற்ற காலத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு கட்சி பேதமின்றி உதவிகள் வழங்கப்படும் என அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபைத் தேர்தலில் மக்கள் சரியானவர்களைத் தேர்வு செய்தால் பலாலியில் மீள்குடியேற்றம்

வடமாகாண சபைத் தேர்தலில் வடக்கு மக்கள் சரியானவர்களைத் தேர்வு செய்தால் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் கூட ஜனாதிபதியின் ஆசியுடன் மக்களை மீள்குடியேற்றம் செய்வேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குருநகரில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைத்தேர்தலில் நாம் போட்டியிடுவோம். தேர்தல் எமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் எந்த எந்தவொரு முடிவையும் நாம் எடுக்கவில்லை.

கூட்டமைப்பினரும் வடக்கு தேர்தலில் போட்டியிடவுள்ளனர். அவர்களின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் கட்சி மட்டத்தில் பல இழுபறிகள் நிலவுகின்றன.

அரச தரப்பிலும் பலர் போட்டியிடவுள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது என்றார்.

Related Posts