முரளி வெற்றிக்கிண்ணம் 29 இல் ஆரம்பம்!

முரளி நல்லிணக்க வெற்றிக் கிண்ணக் கிரிக்கெட் ருவென்ரி-20 போட்டிகள் வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

muralicup-2014

வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே போட்டி ஏற்பாட்டளரான முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் இணை அனுசரணையாளர்களான இலங்கை அணி வீரர்களான குமார் சங்ககார, மஹேல ஜெயவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

5 நாள்கள் இடம்பெறும் இந்த சுற்றுப் போட்டி யாழ்ப்பாணம், ஒட்டுசுட்டான், மாங்குளம், கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. இதில் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை ஆண்கள் அணிகளும், 23 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அணிகளுமாக 24 அணிகள் பங்கேற்கின்றன.

Related Posts